×

மின்கட்டண உயர்வை கண்டித்து 2000 தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

அம்பத்தூர்: சிறு குறு தொழிற்சாலைகளின் மின்கட்டண உயர்வை கண்டித்தும், 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, வில்லிவாக்கம், திருமுல்லைவாயல் சிப்காட், திருமுடிவாக்கம் பகுதி தொழிற்சாலைகள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, அம்பத்தூர் அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் 2000 தொழிற்சாலைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

போராட்டத்தின்போது, குடிசை மற்றும் சிறு குறு மின்கணக்கு ஒருவருக்கு 12 கிலோ வாட் டாரிப் அடிப்படையில் மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும். தாழ்வழுத்த நிலை மின் கட்டணமாக எல்பி பிக்சட் சார்ஜஸ் வழங்கப்பட வேண்டும். உயர் மின்னழுத்த கேட்பு கட்டணமாக பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பின் தற்போது வசூலிக்கப்படும் ரூ.562/ கிலோ வாட் முந்தைய கட்டணம் ₹350/ கிலோ வாட் ஆக குறைக்கப்பட வேண்டும்.

காலை மாலை அதிக பயன்பாடு உள்ள நேரம் 8 மணி நேரத்திற்கு 15% கட்டணம் கூடுதலாக உள்ளதாகவும் அதில் 20 இருந்து 25% உயர்த்தப்பட்டுள்ளது. வருடம்தோறும் 1% சதவீத மின்கட்டணம் உயர்வு இருத்தல் வேண்டும். ரூப்டாப் சோலார் நெட்வொர்க்கிங் சார்ஜஸ் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 112 லிருந்து 150 கிலோ வாட் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும், என அம்பத்தூர் தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சாலை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.அரவிந்த் தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள 169 தொழிற்சாலை அசோசியேஷன்கள் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிற்சாலைகள், இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் ₹380 கோடி வணிகம் பாதிக்கப்பட்டது.

The post மின்கட்டண உயர்வை கண்டித்து 2000 தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Ambanthur ,Badi ,Villiwakakam ,Thirumullaivayal ,Villiwakam ,Thirumullaivayawayal ,
× RELATED கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ்...